search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆவணி திருவிழா"

    • சுப்பிரமணிய சுவாமி வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா.
    • தேரோட்டம் இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

    விழாவின் 7-ம் திருநாளன்று சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளினார். மாலையில் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் சிவப்பு சாத்தி கோலத்தில் தங்க சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    8-ம் நாள் திருவிழாவில் காலையில் சுவாமி சண்முகர் வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் பிரம்மா அம்சமாகவும், பிற்கபலில் பச்சை சாத்தி கோலத்தில் பெருமாள் அம்சமாகவும் எழுந்தருளினார். 9-ம் திருநாளான நேற்று மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமானும், அலைவாயுகந்த பெருமானும் தனித்தனி வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழாவான இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. இதை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு முதலில் விநாயகர் தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நான்கு ரதவீதிகளில் உலா வந்து நிலையம் சேர்ந்தது.

    பின்னர் சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி- தெய்வானையுடன் எழுந்தருளிய தேர் புறப்பட்டு வெளிவீதி நான்கிலும் பவனி வந்து நிலையை வந்து சேர்ந்தது. அதைத்தொடர்ந்து வள்ளியம்மாள் எழுந்தருளிய தேர் வெளிவீதி நான்கிலும் பவனி வந்து நிலையை சேர்ந்தது.

    இதில் திருச்செந்தூர் சார்பு நீதிமன்ற நீதிபதி வஷித்குமார், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கணேசன், செந்தில் முருகன், கோவில் கண்காணிப்பாளர்கள் ஆனந்தராஜ், செந்தில் வேல்முருகன், டாக்டர் பாலசுப்ரமணிய ஆதித்தன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தொடர்ந்து இரவு சுவாமி, அம்பாள் பெரிய பல்லக்குகளில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவிலை அடைகிறார்கள்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை நடைபெறும்.
    • பச்சை சாத்தி மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம்.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    கோலாகலமாக நடந்து வரும் இந்த விழாவின் 8-ம் நாளான நேற்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. அதிகாலை 5 மணியளவில் சுவாமி சண்முகர் வெள்ளை நிற பட்டு அணிந்து, வெண்ணிற மலர்கள் சூடி பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி, பிரம்மா அம்சமாக வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    பின்னர் மேலக்கோவில் சென்ற சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பந்தல் மண்டபத்தில் பச்சை சாத்தி மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடந்தது. மதியம் 12.05 மணியளவில் சுவாமி சண்முகர்- வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை நிற பட்டாடை அணிந்து, பச்சை நிற மலர்கள் சூடி பச்சை சாத்தி கோலத்தில் பெருமாள் அம்சமாக எழுந்தருளினார்.

    பின்னர் ௮ வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், 10-ம் நாளான நாளை (புதன்கிழமை) காலை 6 மணிக்கு நடக்கிறது. முதலில் விநாயகர் எழுந்தருளிய தேரும், பின்னர் சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் எழுந்தருளிய தேரும் 4 ரத வீதிகளில் பவனி வருகிறது. தொடர்ந்து வள்ளி அம்பாள் எழுந்தருளிய தேரானது ரத வீதிகளில் பவனி வந்து நிலையை சேர்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    • சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • பச்சை சாத்தி கோலத்தில் பெருமாள் அம்சமாக எழுந்தருளி வீதி உலா

    திருச்செந்தூர்:

    முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    7-ம் நாளான நேற்று மாலையில் சுவாமி சண்முகர் வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் செம்பட்டு அணிந்து, செம்மலர் சூடி சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் பின்புறமாக நடராஜர் அலங்காரத்தில் சிவன் அம்சமாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    8-ம் திருவிழாவான இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் பிரம்மா அம்சமாக எழுந்தருளி வீதி உலா வந்து மேல் கோசிவ் சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து மதியம் 12 மணிக்கு பச்சை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பச்சை சாத்தி கோலத்தில் பெருமாள் அம்சமாக பச்சைக் கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவில் வந்து சேர்ந்தார். அப்போது திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள் (புதன் கிழமை) காலை 6 மணிக்கு நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், உறுப்பினர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன், கோவில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை.
    • தேரோட்டம் வருகிற 13-ந் தேதி காலை 6 மணிக்கு நடக்கிறது.

    திருச்செந்தூர்,செப்.10-

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    7-ம்திருவிழா இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சியும், தொடர்ந்து 8.45 மணிக்கு சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானையுடன் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து பிள்ளையன் கட்டளை மண்டபத்தில் சேர்ந்தார்.

    அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று, மாலை 4 மணிக்கு தங்க சப்பரத்தில் சிவப்புசாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    நாளை 8-ம் திருவிழாவில் சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் காலை 5 மணிக்கு பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளைச்சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து மேலக்கோவில் சேர்ந்து, அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது.

    தொடர்ந்து மதியம் 12 மணிக்கு பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவில் வந்து சேர்கிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 13-ந் தேதி காலை 6 மணிக்கு நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    • 9 -ம் நாளான நாளை (31-ந்தேதி) மாலையில் தேரோட்டம் நடக்கிறது.
    • ஆவணி திருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கன்னியாகுமரி :

    குமரிமாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இந்த திருவிழா நாளைமறுநாள்செப்டம்பர் 1-ந் தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. இந்ததிருவிழாவை யொட்டி தினமும் திருவேங்கட விண்ணவரப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்கார தீபாராதனையும்நடந்து வருகிறது. திருவிழாவின் 9 -ம் நாளான நாளை (31-ந்தேதி) மாலையில் தேரோட்டம் நடக்கிறது.

    இதையொட்டி நாளை மாலை4மணிக்கு இந்திரன் தேராகிய சப்பரதேரில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி எழுந்தருளி 4 ரத வீதிகளிலும் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 10-ம் திருவிழாவான செப்டம்பர் 1-ந்தேதி ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

    இந்ததிருவிழாவுக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவிலின் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், சுந்தரி, துளசிதர நாயர், ஜோதீஷ்குமார் மற்றும் கோவில்களின் கண்காணிப்பாளர் ஆனந்த், மேலாளர் ஆறுமுகதரன், கணக்காளர் கண்ணன் மற்றும் பக்தர்கள் செய்து வருகிறார்கள்.

    • அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேரில் அய்யா வீற்றிருக்க தேரோட்டம் தொடங்கியது.
    • திருத்தேர் மாலை 6 மணிக்கு நிலைக்கு வந்தடைகிறது.

    தென்தாமரைகுளம் :

    சாமிதோப்புஅய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்று வருகிறது.

    விழாவின் 11-வது நாளான இன்று பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு திரு நடைதிறத்தலும், தொடர்ந்து அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும் நடைபெற்றது. தொடர்ந்து காலை 11 மணிக்கு வைகுண்டசாமி பச்சை பல்லக்கு வாகனத்தில் வந்து பஞ்சவர்ண தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. பகல் 12 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேரில் அய்யா வீற்றிருக்க தேரோட்டம் தொடங்கியது.

    மேள தாளங்கள் முழங்க சந்தன குடம், முத்துக்குடை ஏந்திய பக்தர்கள் முன்னே செல்ல காவியுடை அணிந்த அய்யா வழி பக்தர்கள் அய்யா சிவசிவ அரகரா அரகரா என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்ட நிகழ்ச்சிக்கு பூஜித குரு. சாமி தலைமை தாங்கினார். பூஜிதகுரு.ராஜசேகரன், பூஜிதகுரு.தங்க பாண்டியன், வக்கீல் ஆனந்த், பொறியாளர் அரவிந்த், வக்கீல் அஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைப்பதியின் முன்பிருந்து புறப்பட்ட திருத்தேர் கீழரத வீதி, தெற்கு ரதவீதி, மேல ரத வீதி வழியாக வடக்கு ரத வீதியில் உள்ள தலைமைப்பதியின் வடக்கு வாசல் பகுதிக்கு வந்தது.

    திருத்தேர் வடக்கு வாசல் பகுதிக்கு வரும்போது திரளான அய்யா வழி பக்தர்கள் அய்யா வைகுண்டசாமிக்கு பழம், வெற்றிலை, பாக்கு, பன்னீர் உள்ளிட்ட பொருட்களை நீண்ட வரிசையில் நின்று சுருளாக படைத்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருத்தேர் மாலை 6 மணிக்கு நிலைக்கு வந்தடைகிறது.

    தேரோட்ட நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சாமிதோப்பிற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. காவல்துறை சார்பில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் இரவு 7 மணிக்கு அய்யாவின் ரிஷப வாகன ஊர்வலம் நடைபெறுகிறது.

    • பகல் 12 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேரில் அய்யா வீற்றிருக்க தேரோட்டம் தொடங்குகிறது
    • தேரோட்ட நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர்.

    தென்தாமரைகுளம் :

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கடந்த 18-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது. விழாவின் 11-வது நாளான நாளை (28-ந்தேதி) பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. தேரோட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு நாளை அதிகாலை 4 மணிக்கு திரு நடைதிறத்தலும், தொடர்ந்து அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும் நடைபெறுகிறது.

    தொடர்ந்து காலை 11 மணிக்கு வைகுண்டசாமி பச்சை பல்லக்கு வாகனத்தில் வந்து பஞ்சவர்ண தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. பகல் 12 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேரில் அய்யா வீற்றிருக்க தேரோட்டம் தொடங்குகிறது. மேள தாளங்கள் முழங்க சந்தன குடம், முத்துக்குடை ஏந்திய பக்தர்கள் முன்னே செல்ல காவியுடை அணிந்த அய்யாவழி பக்தர்கள் அய்யா சிவ சிவ அரகரா அரகரா என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர். தேரோட்ட நிகழ்ச்சிக்கு பூஜித குரு.சாமி தலைமை தாங்குகிறார். பூஜித குரு.ராஜசேகரன், பூஜிதகுரு.தங்கபாண்டியன், வக்கீல் ஆனந்த், பொறியாளர் அரவிந்த், வக்கீல் அஜித் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    தலைமைப்பதியின் முன்பிருந்து புறப்படும் திருத்தேர் கீழரத வீதி, தெற்கு ரதவீதி, மேல ரத வீதி வழியாக வடக்கு ரத வீதியில் உள்ள தலைமைப்பதியின் வடக்கு வாசல் பகுதிக்கு வந்தடையும்.

    திருத்தேர் வடக்கு வாசல் பகுதிக்கு வரும்போது திரளான அய்யாவழி பக்தர்கள் அய்யா வைகுண்டசாமிக்கு பழம், வெற்றிலை, பாக்கு, பன்னீர் உள்ளிட்ட பொருட்களை நீண்ட வரிசையில் நின்று சுருளாக படைத்து வழிபடுவர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருத்தேர் மாலை 6 மணிக்கு நிலைக்கு வந்தடையும்.

    தேரோட்ட நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர். பின்னர் இரவு 7 மணிக்கு அய்யாவின் ரிஷப வாகன ஊர்வலம் நடைபெறுகிறது.

    • கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது
    • திருவிழாவின் 9 -ம் நாளான வருகிற 31-ந்தேதி மாலையில் தேரோட்டம் நடக்கிறது

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி மாதங்களில் 10 நாட்கள் திருவிழாநடைபெறுவது வழக்கம்.

    அதேபோல இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. இதையொட்டி இன்று காலை 8-15 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. மாத்தூர் மடம் தந்திரி சுஜித் நாராயணரூ கொடிபட்டத்தை பஞ்ச வாத்தியங்கள் மற்றும் மேளதாளங்கள் முழங்க கொடி மரத்தில் ஏற்றினார்.

    விழாவில் விஜய் வசந்த் எம்.பி., தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் மற்றும் பக்தர் கள் கலந்து கொண்டனர்.

    இதை தொடர்ந்து கொடிமரத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இந்த திருவிழா நாட்களில் தினமும் திருவேங்கட விண்ணவரப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனை போன்ற வை நடக்கிறது. திருவிழாவின் 9 -ம் நாளான வருகிற 31-ந்தேதி மாலையில் தேரோட்டம் நடக்கிறது இதையொட்டி இந்திரன் தேராகிய சப்பரதேரில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி எழுந்தருளி 4 ரத வீதி களிலும் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    10-ம் நாளான அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந் தேதி ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவிலின் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், சுந்தரி, துளசிதர நாயர், ஜோதீஷ்க மார் மற்றும் கோவில்களின் கண்காணிப்பாளர் ஆனந்த், மேலாளர் ஆறுமுகதரன், கணக்காளர் கண்ணன் மற்றும் பக்தர்கள் செய்து வருகிறார்கள்

    • விழாவையொட்டி அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.
    • பின்னர் அம்மன் வீதி உலா நடைபெற்றது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள உதயமார்த்தாண்டபுரம் கிராமத்தில் மகாகாளி அம்மன், வீரமாகாளி அம்மன், பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் ஆவணி திருவிழா நடைபெற்றது.

    விழாவையொட்டி அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    தொடர்ந்து மாவிளக்கு போடுதல், சிறப்பு அர்ச்சனை ஆகியவை நடந்தது.

    பின்னர் அம்மன் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • விழாவின் 2-ம் நாள் காலை சுவாமி, அம்பாள் ஏக சிம்மாசனத்திலும், இரவு விநாயகர் மூஷிக வாகனத்திலும், முருகன் மயில் வாகனத்திலும் வீதி உலா வந்தனர்.
    • வருகிற 28-ந் தேதி முக்கிய நிகழ்வான தேர் வீதி உலா நடைபெறுகிறது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள ஆலடிப்பட்டி வைத்தியலிங்க சுவாமி - அன்னை யோகாம்பிகை கோவில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவையொட்டி காலை சிம்ம லக்கனத்தில் கொடி மரத்தில் கொடி யேற்றப்பட்டது.

    தொடர்ந்து அபிஷேகம், தீபாராதனையும், இரவில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சியும் நடை பெற்றது.

    விழாவின் 2-ம் நாள் காலை சுவாமி, அம்பாள் ஏக சிம்மாச னத்திலும், இரவு விநாயகர் மூஷிக வாகனத்திலும், முருகன் மயில் வாகனத்திலும் வீதி உலா வந்தனர்.

    தொடர்ந்து நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், தீபாரா தனை, மண்டகப்படி தீபாராதனை, சுவாமி வீதி உலா நிகழ்வுகள் நடைபெறுகிறது.

    விழாவின் 10 -ம் திருநாளான வருகிற 28-ந் தேதி முக்கிய நிகழ்வான தேர் வீதி உலா நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் திருத்தேரை வடம்பிடித்து இழுத்துச் செல்கின்றனர்.

    11 -ம் நாள் சுவாமி, அம்பாள் ரிஷப வாகன காட்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா சுப்பிரமணிய உமாபதி மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

    • இன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதலும்
    • 6 மணிக்கு திருக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.

    நாகர்கோவில் :  சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முதல் நாள் நிகழ்ச்சியான கொடியேற்று விழா நிகழ்ச்சியையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதலும், 5 மணிக்கு சிறப்பு பணிவிடையும், 5.30 மணிக்கு கொடிபட்டம் தயாரிக்கப்பட்டு பதியை சுற்றி வலம் வந்து 6 மணிக்கு திருக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு பூஜித குரு சுவாமி தலைமை தாங்கினார். திருக்கொடியை பூஜிதகுரு ராஜசேகரன் ஏற்றி வைத்தார். பூஜிதகுரு தங்க பாண்டியன், வக்கீல் ஆனந்த், பொறியாளர் அரவிந்த், வக்கீல் அஜித் ஆகியோர் முன்னிலை வகித்து, பள்ளியறை பணி விடைகளை செய்திருந்தனர்.

    பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம் நடைபெற்றது. இன்று இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடை பெறுகிறது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகி றது. வருகிற 25-ந்தேதி (வெள்ளிக்கி ழமை) மாலை 8-ம் திருவிழா நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்ட சுவாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரிகிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது.

    தொடர்ந்து இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யாவின் தவக்கோல காட்சி அளிக்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து அன்னதானமும் நடை பெறுகிறது. 9-ம் திருவிழா அன்று அனுமன் வாகனத்திலும், 10-ம் நாள் திருவிழா அன்று இந்திர வாகனத்திலும் அய்யா பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    வருகிற 28-ந்தேதி 11-ம் திருவிழா நடைபெறுகிறது. அன்று நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறு கிறது. அன்று இரவு ரிஷப வாகனத்தில் அய்யா வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை, பணிவிடையும் மதியம் உச்சி படிப்பும், இரவு வாகன பவனியும், அன்னதானமும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறு கிறது. திருவிழா நாட்களில் காலை, மதியம், இரவு நேரங்களில் தலைமை பதி முன்பு அன்னதானம் நடை பெறுகிறது.

    • இந்த திருவிழா இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
    • புதன்கிழமை அத்தாழ பூஜை நடைபெறும்.

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆவணித் திருவிழா இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. விழா நாளை மறுநாள் (புதன்கிழமை) வரை 3 நாட்கள் நடக்கிறது.

    இன்று அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷபூஜை, 9 மணிக்கு பஜனை, மதியம் 12 மணிக்கு உச்சபூஜை, மாலை 5.15 மணிக்கு சுமங்கலி பூஜை, இரவு 8 மணிக்கு அத்தாழ பூஜை போன்றவை நடக்கிறது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு சுமங்கலி பூஜை செய்கின்றனர்.

    நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு பஜனை, 10.45 மணிக்கு 5001 பொங்கல் வழிபாடு, மதியம் 12.30 மணிக்கு பொங்கலுக்கு தீர்த்தம் தெளித்தல், 1 மணிக்கு தீபாராதனை, தொடர்ந்து அன்னதானம் போன்றவை நடக்கிறது.

    நாளை மறுநாள் மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, 6 மணிக்கு தங்கரதம் பவனி, 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணிக்கு கோவில் சமய வகுப்பு மாணவர்கள் மற்றும் மண்டைக்காடு தேவஸ்தான மேல் நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குதல், 8 மணிக்கு அத்தாழ பூஜை போன்றவை நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    ×